search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்ப போட்டி"

    • தென் மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை-சீதையம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் அறக்கட்டளை சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். போட்டியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குழுக்கள் அடங்கிய மாணவ -மாணவிகள் வந்திருந்தனர்.

    தனித்திறன், குழு திறன், பொது திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 3-ம் பரிசு அம்மன் சிலம்பக்கூடம் திருச்சி, 2-ம் பரிசு ஜோதி வேலு சிலம்பக் கூடம் திருச்சி, முதல் பரிசு முத்தமிழ் சிலம்ப கூடம் திருச்சி ஆகிய குழுவினர் பரிசினை பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் செய்திருந்தார்.

    • இப்போட்டியானது 5 வகை பிரிவுகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 20 மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டினர்.

    தென்காசி:

    தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சிலம்பாட்ட தேர்வு போட்டி நடைபெற்றது இப்போட்டியை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மேல கரம், புளியரை அரசு மேல்நிலைப்பள்ளி, தெற்கு மேடு அரசு நடுநிலைப்பள்ளி, இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வெள்ளானை கோட்டை குரு பாக்கியம் தொடக்கப்பள்ளி, கட்டளை குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி, குற்றாலம் பராசக்தி வித்யாலயா, ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி, எம்.கே. வி.கே. மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி, செவல்குளம் சென்ட் பால்ஸ் பள்ளி,தென்காசி 7-வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியானது ஒற்றைக்கம்பு , இரட்டைக் கம்பு, பாயிண்ட், குத்து வரிசை ,சிலம்பம் பிரேயர் என்ற 5 வகை பிரிவுகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 20 மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி வளாகத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும் என பயிற்சியாளர் சிலம்பம் பாப்பையா தெரிவித்தார்.

    போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எம்.கே.வி.கே. பள்ளி முதல்வர் இயேசு பாலன், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலா, வழக்கறிஞர் இசக்கி முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலம்ப ஆசிரியர்கள் கோவிந்த பேரி வனராஜ் பாண்டியன், தெற்கு மேடு மணிகண்டன் வேல்விழி, வெள்ளானை கோட்டை சண்முகப்பிரியா, வடகரைவிக்னேஷ் குமார், திலீப் தேவேந்திரன், துரை , வாசுதேவநல்லூர் மணிகண்டன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கி ணைத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆல் இந்தியா சிலம்பம் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சிலம்பம் பாப்பையா, பொன்னுத் துரை, தங்கராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செல்வின், தலைமையாசிரியர் குணசீலன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நாசரேத்:

    சாத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

    போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் இரண்டாவது பரிசினை முத்துராஜ், ஆல்ட்ரின், யூதாஆகியோர் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் டென்னிசனையும் பள்ளி தாளாளர் செல்வின், பள்ளி தலைமையாசிரியர் குணசீலன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஏஞ்சல் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • திண்டுக்கல் மாவட்டம் ராஜகாப்பட்டியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி பல்வேறு பிரிவினருக்கு நடந்தது.
    • மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் ராஜகாப்பட்டியில் எஸ்.வி.எம். சிலம்பம் தற்காப்பு கலை அகாடமி சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி பல்வேறு பிரிவினருக்கு நடந்தது.

    மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளின் முடிவில் நத்தம் அய்யனார்புரம் சர்வ சேவா ஸ்பேரோஸ் நெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

    பள்ளி செயலாளர் வசந்தா, முதல்வர் சண்முககுமார் போட்டிக்கான ஏற்பாடுகளை சிலம்ப பயிற்சியாளர் சங்கர் செய்திருந்தனர்.

    • ஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பப் போட்டிகள் கோவாவில் ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழகம் சார்பில் 27 மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள். விஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.

    8வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அவிநாசியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகளும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

    அவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொடர் பயிற்சி அளித்த சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் தேவ அரசு என்ற 3 பயிற்சியாளர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தனர். 15 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பாட்ட போட்டியில் 27 தங்கப்பதக்கங்களை தமிழக மாணவர்கள் பெற்றது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    ×